Monday, February 18, 2013

  • தேவாங்கர்களின் திருமண முறைகள்



    திருமண உறவுமுறைகள்

    தேவாங்கர் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களின் குழந்தைகள் தந்தை சார்ந்துள்ள வங்குசம் (வம்சம்) அவர்களுடைய வங்குசமாகக் கொளளப்படுகிறது. தங்கள் வங்குசம் தவிர பிற வங்குசத்தைச் சேர்ந்தவர்களை திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருமண நிச்சயதார்த்த சடங்குகள்

    *      மணமகள் இல்லத்தில் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.    *      மணமகன் வீட்டார் சீர்வரிசைத் தட்டுகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்து மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.    *      தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரரிடம் மணமகன் வீட்டார் அந்த ஊர் தேவாங்கர் சாதி அமைப்பில் நிர்ணயித்துள்ள பணம் செலுத்தி மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.    *      மணபெண்ணுக்கு மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சீர்வரிசைகள் செய்து நலுங்கு வைக்க வேண்டும்.    *      இதன் பின்பு மணப்பெண் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்களிடம் வணங்கி வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.    *      இதன் பிறகு மணமகன் வீட்டார் மணப்பெண் உறவினர்களைத் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரது முன்னிலையிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

    திருமணச் சடங்குகள்

    முகூர்த்த நாளின் முதல் நாள் இரவு மணமக்கள் தாய்மாமன்களால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வரவேண்டும். இப்போது இது வழக்கத்தில் அருகி வருகிறது.

    வீரமாஸ்தி கும்பிடுதல்

    தேவையான பொருட்கள்

    மணமக்கள் அணிந்து கொள்ள தலா 2 ஜதை வேஷ்டிகள் வீதம் – 4 ஜதைகள் ஈரிழை சிவப்பு துண்டுகள் – 4கூரை புடவை ( கோலமல சேலை ) – 1 செட் தாலி, கால் மிஞ்சு அங்குநூல், காதோலை கருமணி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி முதலியன..- பூஜை முடிந்தபின் மணமகனுக்கு தாய்மாமன் மிஞ்சு அணிவிக்க வேண்டும்.

    இரவு விருந்து (கை நீர் சொம்பு வழங்குவது)

    மணமகன் வீட்டினர் தன்னுடைய தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் கை நீர் சொம்பு வழங்க வேண்டும். செட்டிமைக்காரர் ஸ்தல பெத்தருக்கும், மணப்பெண் வீட்டார் சொந்தக்காரருக்கும் தங்களிடம் உள்ள கைநீர் சொம்பைக் கொடுத்து விருந்துக்கு அழைக்க வேண்டும். மணமகன் வீட்டினர் தன்னுடைய சொந்தக்காரருக்குக் கை நீர் சொம்பு கொடுத்து உறவினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.

    பூஜை

    தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் அமர கம்பளி விரித்து வைக்க வேண்டும். அவரிடம் மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்குரிய பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

    கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

    அரணை முட்டிகள் - 6முச்சளம் - 6மொந்தை - 4ஊசி மூடிகள் - 2மண் தீபங்கள் - 7மண் தூபக்கால்- 2    *      பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும்.    *      அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.    *      கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும்.    *      கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும்.    *      முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.    *      கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

    கங்கணம் கட்ட தேவையான பொருட்கள்

    மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.

    கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்

    வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

    செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்

    *      மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.    *      மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.    *      செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும்.    *      மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும்.    *      மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது.    *      அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

    ஸ்தலது கொம்பு விவரம்

    அரச மரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே ஸ்தலது கொம்பு திருமூர்த்திகளுக்கு வணக்கம் செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகும்.மணமகன் மணவறையில் அமர்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    பூஜைக்கு தேவையான பொருட்கள்

    அரசமரக் கொம்பு, மஞ்சள் கொம்பு, மண் தீபம், அச்சு வெல்லம், பச்சரிசி 1 படி, தேங்காய் -3, பழம் -2, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழை இலை, குங்குமம்

    பூஜை முறை

    *      கோவிலில் அரச இலையில் பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.    *      மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது மணமகனின் சகோதரி மேற்கண்ட பூஜைப் பொருட்களுடன் புது கூடையில் மணமகன் அணிந்து கொள்ளும் மஞ்சள் வேஷ்டி, பணம் மற்றும் புது பாய் எடுத்துச் செல்ல வேண்டும்.    *      பூஜைக்கு கொண்டு செல்லும் 3 தேங்காய்களில் 1 பிள்ளையாருக்கும், 2 வது தேங்காய் பஜனை கோவிலுக்கும், 3 வது தேங்காய் மணமகளின் மடியில் பச்சரிசியுடன் வைத்து கட்டிக் கொள்ளவும் வேண்டும்.    *      மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு போகும்போது தாய்மாமன் கொடுத்த அங்கவஸ்திரத்தை வலது தோள் மீதும், மஞ்சள் வேஷ்டியை இடது தோள் மீதும் அணிந்து செல்ல வேண்டும். பூஜை முடித்து வரும்போது மணமகளின் சகோதரி மணமகனுக்கு பாத பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமகனுக்கு பால், பழம் கொடுக்க வேண்டும். தாலி கட்டிய பின் கம்பளி விரித்தல்    *      செட்டிமைக்காரர் உறவினர் முன்னிலையில் மணமக்களின் தாய்மாமன்கள் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து அதையும் ஜம்புதாடி கத்தியையும் செட்டிமைக்காரர் வசம் ஒப்படைத்தல், செட்டிமைக்காரர் மணமகன் வீட்டாரிடம் பணம் பெற்று கங்கண துணியில் வைத்து மஞ்சள் முடிப்பை மணமகள் வீட்டாரிடம் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். காலி மஞ்சள் முடிப்பை மணமகன் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். பின் இரு வீட்டாரிடமிருந்தும் கங்கண முடிப்பை செட்டிமைக்காரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.    *      செட்டிமைக்காரர் வரிசைப்படி வங்குசதாரர்களை அழைத்து செலவு சம்பாரம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.            


7 comments:

  1. நம் குல வழக்கபடி நடந்த ஒரு இனிய திருமணததில் கலந்து கொண்ட அனுபவம் கிடைத்தது.நன்றி.

    ReplyDelete
  2. An Excellent wondering article I highly excited recommend this every one of Devanga community people should read it follow them strictly in their life, congratulations

    ReplyDelete
  3. It's very useful for this generation

    ReplyDelete
  4. It's very useful for this generation

    ReplyDelete