Thursday, April 4, 2013

தேவாங்க குல ரிஷி கோத்ரங்கள்

1.அகத்திய மகரிஷி கோத்ரம்
2.அகர்ச்ச மகரிஷி கோத்ரம்
3.அசிதேவ மகரிஷி கோத்ரம்
4. அச்சுத மகரிஷி கோத்ரம்
5.அஞ்சன தேவரிஷி கோத்ரம்
6.அட்சய தேவரிஷி கோத்ரம்
7.அதித மகரிஷி கோத்ரம்
8.அதிவி மகரிஷி கோத்ரம்
9.அத்திரி மகரிஷி கோத்ரம்
10.அமர மகரிஷி கோத்ரம்
11.அரித்ஸ மகரிஷி கோத்ரம்
12.அஸ்ர மகரிஷி கோத்ரம்
13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம்
14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம்
15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம்
16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம்
17 .இந்திரத்தூய்ம்ம இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம்
18 .உபமன்யு மகரிஷி கோத்ரம்
19 .உஷன மகரிஷி கோத்ரம்
20 .கண்வ மகரிஷி கோத்ரம்
21 .கபில மகரிஷி கோத்ரம்
22 .கரசக மகரிஷி கோத்ரம்
23 .கவுச மகரிஷி கோத்ரம்
23A . கனக மகரிஷி கோத்ரம்
24 . காங்கேய மகரிஷி கோத்ரம்
25.காத்ய காத்யாயன காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம்
26 .காபால மகரிஷி கோத்ரம்
27 .காமுக மகரிஷி கோத்ரம்
28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம்
29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம்
30 .காலவ மகரிஷி கோத்ரம்
31 .கான மகரிஷி கோத்ரம்
32 .காசியப மகரிஷி கோத்ரம்
33 .கிந்தம மகரிஷி கோத்ரம்
34 .கிருது மகரிஷி கோத்ரம்
35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம்
36 .குச மகரிஷி கோத்ரம்
37 .குடும்ப மகரிஷி கோத்ரம்
38 .குத்ஸக மகரிஷி கோத்ரம்
39 .குத்தால மகரிஷி கோத்ரம்
40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம்
41 .கெளசிக மகரிஷி கோத்ரம்
42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம்
43 .கௌதம மகரிஷி கோத்ரம்
44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம்
45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம்
46 .சகுனி மகரிஷி கோத்ரம்
47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம்
48 .சதுமுக மகரிஷி கோத்ரம்
49 .சதாநந்த மகரிஷி கோத்ரம்
50 .சங்கு மகரிஷி கோத்ரம்
51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம்
52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம்
53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம்
54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம்
55 .சம்பு மகரிஷி கோத்ரம்
56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம்
57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம்
58 .சர்வ மகரிஷி கோத்ரம்
59 .சவித்திர மகரிஷி கோத்ரம்
60 .சனக சனந்த மகரிஷி கோத்ரம்
61 .சனத்குமார மகரிஷி கோத்ரம்
62 .சனத்துஜாத மகரிஷி கோத்ரம்
63 .சாங்கிய மகரிஷி கோத்ரம்
64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம்
65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம்
66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம்
67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம்
68 .சாரரத மகரிஷி கோத்ரம்
69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம்
70 .சானக மகரிஷி கோத்ரம்
71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம்
72 .சிருக்க மகரிஷி கோத்ரம்
73 .சிருங்கி மகரிஷி கோத்ரம்
74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம்
75 .சுக மகரிஷி கோத்ரம்
76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம்
77 .சுத்மல மகரிஷி கோத்ரம்
78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம்
79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம்
80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம்
81 .சோமக மகரிஷி கோத்ரம்
82 .சோமகுல மகரிஷி கோத்ரம்
83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம்
84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம்
85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம்
86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம்
87 .சௌநக மகரிஷி கோத்ரம்
88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம்
89 .தத மகரிஷி கோத்ரம்
90 .தசீத மகரிஷி கோத்ரம்
91 .ததீசி மகரிஷி கோத்ரம்
92 .தம்ப மகரிஷி கோத்ரம்
93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்
94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்
95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்
96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம்
97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம்
98 .துத்ஸ மகரிஷி கோத்ரம்
99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம்
100 .துவைபாயன மகரிஷி கோத்ரம்
101. துர்வாச மகரிஷி கோத்ரம்
102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம்
103 .தேவ மகரிஷி கோத்ரம்
104 .தேவதத்த மகரிஷி கோத்ரம்
105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம்
106 .தேவராத மகரிஷி கோத்ரம்
107 .தைவக்ய மகரிஷி கோத்ரம்
108 .தைவராத மகரிஷி கோத்ரம்
109 .தௌபாய மகரிஷி கோத்ரம்
110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம்
111 .நாமதேவ மகரிஷி கோத்ரம்
112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம்
113 .நாரத மகரிஷி கோத்ரம்
114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம்
115 . பகதேவ மகரிஷி கோத்ரம்
116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்
117 .பத்ம மகரிஷி கோத்ரம்
118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம்
119 .பராசர மகரிஷி கோத்ரம்
120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம்
121 .பர்வத மகரிஷி கோத்ரம்
122 .பாக மகரிஷி கோத்ரம்
123 .பாபால மகரிஷி கோத்ரம்
124 .பாவஜ மகரிஷி கோத்ரம்
125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம்
126 .பிகி மகரிஷி கோத்ரம்
127 .பிப்பல மகரிஷி கோத்ரம்
128 .பிரதாப மகரிஷி கோத்ரம்
129 .பிருங்கி மகரிஷி கோத்ரம்
130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம்
131 .பிருகு மகரிஷி கோத்ரம்
132 .பீமக மகரிஷி கோத்ரம்
133 .புச மகரிஷி கோத்ரம்
134 .புண்டரீக மகரிஷி கோத்ரம்
135 .புரட்ச மகரிஷி கோத்ரம்
136 .புருகூத மகரிஷி கோத்ரம்
137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம்
138 .போக மகரிஷி கோத்ரம்
139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம்
140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம்
141 .ப்ருகு மகரிஷி கோத்ரம்
142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம்
143 . ப்ருந்த தேவ மகரிஷி கோத்ரம்
144 .புனர் தேவ மகரிஷி கோத்ரம்
145 .மஞ்சுள மகரிஷி கோத்ரம்
146 .மதங்க மகரிஷி கோத்ரம்
147 .மநு மகரிஷி கோத்ரம்
148 .மநுவாம மகரிஷி கோத்ரம்
149 .மரீசி மகரிஷி கோத்ரம்
150 .மத்ஸய மகரிஷி கோத்ரம்
151 .மத்திர தேவ மகரிஷி கோத்ரம்
152 .மல்லா தேவ மகரிஷி கோத்ரம்
153 .மனோரம மகரிஷி கோத்ரம்
154 .மாண்டவ்ய மகரிஷி கோத்ரம்
155 .மார்க்கண்டேய மகரிஷி கோத்ரம்
156 .மால்க மகரிஷி கோத்ரம்
157 .மன்மத மகரிஷி கோத்ரம்
158 .மான்ய மகரிஷி கோத்ரம்
159 .முக மகரிஷி கோத்ரம்
160 .முத்கல மகரிஷி கோத்ரம்
161 .முத்து மகரிஷி கோத்ரம்
162 .முவ்வல மகரிஷி கோத்ரம்
163 .மைத்ரதுய்ம்ம மகரிஷி கோத்ரம்
164 .மைத்ரேய மகரிஷி கோத்ரம்
165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்
166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம்
167 .யாக்ஞ்யவல்கிய மகரிஷி கோத்ரம்
168 . யாக்ஞ தேவ மகரிஷி கோத்ரம்
169 . யோகப்பிருந்த மகரிஷி கோத்ரம்
170 .ரகஸ்ய மகரிஷி கோத்ரம்
171 .ராஜகுலதமகாதேவ மகரிஷி கோத்ரம்
172 .ராஜ மகரிஷி கோத்ரம்
173 .ரிப்பிலாய மகரிஷி கோத்ரம்
174 .ரிஷ்ய மகரிஷி கோத்ரம்
175 .ருஷ்ய மகரிஷி கோத்ரம்
176 .ருக்தேவ மகரிஷி கோத்ரம்
177 .ருத்விஜ மகரிஷி கோத்ரம்
178 .ரைப்பிய மகரிஷி கோத்ரம்
179 .வசிஷ்ட மகரிஷி கோத்ரம்
180 .வஞ்சுல மகரிஷி கோத்ரம்
181 .வத்ஸ மகரிஷி கோத்ரம்
182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம்
183 .வாசுதேவ மகரிஷி கோத்ரம்
184 .வாமதேவ மகரிஷி கோத்ரம்
185 .வாரு மகரிஷி கோத்ரம்
186 .வாருண மகரிஷி கோத்ரம்
187 .வாலகில்ய மகரிஷி கோத்ரம்
188 .வால்மீகி மகரிஷி கோத்ரம்
189 .விக்ஞான மகரிஷி கோத்ரம்
190 .வித்யா மகரிஷி கோத்ரம்
191 .வியாச மகரிஷி கோத்ரம்
192 .விஸ்வாமித்ர மகரிஷி கோத்ரம்
193 வேத மகரிஷி கோத்ரம்
194 .வேபன மகரிஷி கோத்ரம்
195 .வியாக்ரபாத மகரிஷி கோத்ரம்
196 ..ஜமதக்நி மகரிஷி கோத்ரம்
197 .ஜம்பாரி மகரிஷி கோத்ரம்
198 .ஜமு மகரிஷி கோத்ரம்
199 .ஜம்பு மகரிஷி கோத்ரம்
200 .ஜனக மகரிஷி கோத்ரம்
201 .ஜாபாலி மகரிஷி கோத்ரம்
202 .ஜாலக மகரிஷி கோத்ரம்
203 .ஜான்த மகரிஷி கோத்ரம்
204 .ஜெயமுனி மகரிஷி கோத்ரம்
205 .சூரசௌவ மகரிஷி கோத்ரம்
206 . சௌலப்ய மகரிஷி கோத்ரம்
207 . ஸ்யாலக மகரிஷி கோத்ரம்
208 .ஹரித மகரிஷி கோத்ரம்
209 . ஹாலா ஹல மகரிஷி கோத்ரம்
210 . க்சேம க்சேமந்த க்சேமந்ர மகரிஷி கோத்ரம்
211 . ஸ்வாயம்புவ மகரிஷி கோத்ரம்
212 .வீரதந்தி மகரிஷி கோத்ரம்

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

 

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”


இப்படி திருச்செந்தூர்ப் புராணத்தால் வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார். இங்கே வீரபத்திரப் பெருமான் கையில் வாளுடன் விளங்குவதாகவும், பரம்பொருளை நிந்தனை செய்து நாஸ்தீகத் தனமாக வேள்வி செய்த தக்கப் பிரஜாபதியின் கொட்டத்தை அழித்த வீரராகவும் போற்றப்படுகிறார்.  இப்பெருமானின் வணக்க முறைமை இந்துக்களின் வீரத்தின் சாட்சியாகவும், வீரத்தின் விளை நிலமாகவும் விளங்குகிறது.

சிவனாய செல்வன்

வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் என்பதற்கு அழகும் கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள் காண்பர் சைவச் சான்றோர்.
இந்த வீரபத்திரப் பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான். இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக வீரபத்திரரைப் படைத்தான் என்று குறிப்பிடுவர்.
மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்
ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம்
… சூ’ல தண்டோக்ர ஹஸ்தம்
விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி
என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது. இதில், மரகத மணியில் ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த கழலினர், சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவர் அழகியவரான (கோரம் என்பதன் எதிர்ச் சொல் அகோரம்) வீரபத்திரரை வணங்குவோம் என்று சொல்லப் பெற்றிருக்கிறது.
வீரபத்திரரை திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவாரமுதலிகளும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சுட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.  வீரபத்திரர் வரலாற்றுச் செய்திகளை முழுவதும் புராணக்கதைகள் என்று ஒதுக்குவது சிறப்பாகத் தெரியவில்லை. இவற்றில் பல தத்துவச் செய்திகள் இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த, நடக்கக் கூடிய செய்தியாகவே இதனைக் காண முடிகிறது.
வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

வீர சைவர்களின் வீரன்

சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவவடிவமாகவும் (சிவமூர்த்தமாகவும்) கண்டு வழிபட்டு வருகிறார்கள். தட்சனின் யாகத்தை நிர்ரூலம் செய்து சிவபரத்துவத்தை நிலை நிறுத்த அவதரித்த மூர்த்தியே வீரபத்திரர் என்பதே பரவலாகப் பேசப்படும் கருத்து நிலையாக இருந்தாலும், வீரபத்திரர் குறித்து நமது புராணங்களில் மேன் மேலும் பல செய்திகள் சொல்லப்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
விநாயகர், முருகன் போலவே சைவர்களின் சிறப்பிற்பிற்குரிய வழிபடு தெய்வமாக அமைந்திருக்கிற வீரபத்திரரின் வரலாறும் வழிபாட்டு முறைமையும் விநாயகர், முருகக் கடவுளுக்கு இருப்பது போலவே பரந்ததாகவும், ஆழமானதாகவும் பல செய்திகளை உள்வாங்கியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
யஜூர் வேதத்தின் உயிர்நாடியாக விளங்குகிற ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் தட்சனால் பாடப்பெற்றது என்றும் சிலர் நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் அதில் வரும் “மே” என்ற சப்தத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். இது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பினும் சிந்திக்கத்தக்கது.
அவர்கள் கூற்றின் படி, சிவபெருமானால் மறு உயிர் பெற்ற ஆட்டுத் தலை கொண்ட தக்ஷன் சிவனைத் துதித்துப் பாடியது தான் யஜுர் வேதத்தின் முக்கிய பகுதியாகிய ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் என்பது. ஒவ்வொரு பதத்திலும் ஆட்டின் சப்தமாகிய “மே” என்ற சப்தம் வரும் வகையில் அமைந்தது. ‘மே’ என்றால் வேண்டும் என்பது அர்த்தமாகும். “ச’ஞ்சமே மயச்’சமே ப்ரியஞ்சமே” என்று ஒவ்வொரு பதத்திலும் “மே” என்று அமையும்.
அந்தகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக வீரபத்திரர் சப்தமாதர்களுடன் சென்று அவனைப் பொருது வென்றார் என்றும், சிங்க உருவம் பூண்டு நீலன் என்ற அரக்கனை அழித்தார் என்றும், இவரைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
வீரபத்திரர் தக்கனை அழித்துப் பின் உயிர்பெற்றெழச் செய்த போது அவனது தலையானது யாககுண்டத்தில் இடப்பட்டு அழிந்து விட்டதால் அவனுக்கு ஆட்டுத்தலை பொருத்தி உயிர்ப்பித்தார் என்பர். இது உறுப்புக்களை மாற்றிப் பொருத்தும் இன்றைய சத்திர சிகிச்சையுடனும் இணைத்துச் சிந்திக்கத் தக்கதாயிருக்கிறது.
மகாபாரதத்தின் சாந்திபருவத்திலும், மத்ஸயபுராணயத்தின் 72-ம் அத்தியாயத்திலும், பாகவதபுராணத்திலும், லிங்கபுராணம், வராஹபுராணம், கூர்மபுராணம், போன்றவற்றிலும் வீரபத்திரரைப் பற்றிய செய்திகள் நிறைவாக இருக்கின்றன.
வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாகக் கொண்டு போற்றி வழிபடுகிறார்கள். கும்பகோணத்தின் மகாமகக் குளத்தருகில் வீரபத்திரர் கங்காதேவியைக் காக்கும் பொருட்டு இறைவன் கட்டளைப்படி எழுந்தருளியிருப்பதாக வீரசைவர்கள் நம்புகின்றனர். அங்கே பரசிவனே வீரபத்திரருக்கு சிவதீட்சையும் லிங்கதாரணமும் செய்து, வீரசிங்காசனத்தில் அமர்வித்து, வீரசைவமரபு உருவாக வழி செய்தான் என்பதும் நம்பிக்கை.

காவலாய் நிற்கும் கடவுள்

சிவப்பரம்பொருளின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும் வியர்வையிலிருந்து பிறந்தவர் என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இது எவ்வாறாயினும், வீரபத்திரர் சிவாம்சம் என்றே பொதுவான கருத்து நிலை அமைந்திருக்கிறது.
ஆந்திரா எங்கும் வீரபத்திரர் வழிபாடு பரவியிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமியை ஆந்திர மக்கள் மல்லர் என்று போற்றுவதுடன் அவரை வீரபத்திரர் என்றே கருதி வழிபடுகின்றனர்.
விஜய நகர அரசரான ஹரிஹரரின் காலத்தில் கன்னடத்தில் இராகவையங்கார் என்பவர் வீரபத்திரர் வரலாறு பற்றி “வீரேச விஜய” என்ற நூலைப் படைத்திருக்கிறார். (பொ.பி 1400களில்) பத்ரகாளியை வீரபத்திரரின் தோழியாகவும், மனைவியாகவும் போற்றுவர். சரபேஸ்வரர் என்பதும் வீரபத்திரர் நரசிங்கப் பெருமானைச் சாந்தப்படுத்த எடுத்த மூர்த்தமே என்று கொள்வர். யோகப்பயிற்சியிலும் “வீரபத்ராசனா” என்று ஒரு வகை ஆசனம் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சென்னையிலும் கும்பகோணத்திலும் திருவானைக்காவிலும் இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களிலும் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. முக்கிய சிவாலயங்களில் எல்லாம் வீரபத்திரர் தனிச்சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறார்.
இது போலவே, வீரபத்திரமூர்த்தி காவல் தெய்வமாக சேத்திரபாலகராக வழிபாடாற்றப்பெறுவதும் உண்டு. சென்னை வில்லிபாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அகத்தியரின் சிவபூஜையைக் காப்பதற்காகவும், மூகாம்பிகை கோயிலில் அம்பாளைக் காப்பதற்காகவும் வீரபத்திரர் எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்பெறுகிறது.
முகலாயப்  படையெடுப்பாளர்கள் மதவெறி கொண்டு தென்னகத்துச் சிவாலயங்கைள எல்லாம் அழித்தும் சூறையாடியும், இறுதியில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு பொறாமல் அதனை உடைக்க முற்பட்டார்களாம். அப்போது, அந்த வீரபத்திரர் ஜீவ ஓட்டம் மிக்கவராக எழுந்து மிகுந்த கோபக்கனலைச் சிந்தி முகலாயப் படைகளை ஓட ஓட விரட்டியதாகவும் சொல்லப் பெறுகிறது.
தமிழ் இலக்கியங்களும் நாட்டாரியலும் ஏத்தும் திறன் வீரபத்திரர் குறித்த பல செய்திகள் நமது தமிழ் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன. செவ்வைசூடுவார் பாரதத்தில் வீரபத்திரர் எழுச்சியும் வீரச்செயலும் பேசப்படுகிறது.
சூடாமணி நூலில் வீரபத்திரரின் பெயர்களாக
“உக்கிரன் அழல்க்கண் வந்தோன்
ஊமைமகன் சிம்புள் ஆனோன்
முக்கண்ணன், சடையோன், யானை
முகவற்கு இளையோன், வில்லி
செக்கர் வான் நிறத்தோன், குரோதன்,
சிறுவிதி மகம் சிதைத்தோன்
மிக்கப் பத்திரைக் கேள்வன்,
வீரபத்திரன் பேராமே”
என்று பன்னிரு பெயர்கள் பேசப்பட்டிருக்கின்றன.
கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு பேணப்பட்டு வருகிறது. இதே போல இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் பாரம்பரியமான வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு வருகிறது. இவைகளில் வீரபத்திரர் வரலாறு கூத்து வடிவில் காண்பிக்கப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் வீரபத்திரப்பரணி என்ற தக்கயாகப்பரணி பாடியிருக்கிறார். பரணி என்பது போர் குறித்த நூலாயினும் வீரபத்திரரை முன்னிறுத்தி இந்நூல் அவர் தம் பெருவீரத்தைப் புகழ்ந்து பாடுகிறது.
வீரபத்திரர் பற்றி சிறப்பாகப் பேசும் நூல்களில் “சைவசித்தாந்தக் களஞ்சியமாக” கச்சியப்ப சிவாச்சார்யார் பாடிய “கந்தபுராணம்” முதன்மையானது. கந்தபுராணத்தின் கந்தன் வரலாற்றுக்கு ஆதாரக் கதையாக வீரபத்திரர் வரலாறு பேசப்பட்டிருக்கிறது.
இறைவனை மதியாது தக்கன் செய்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் பெற்றதால் தான் சூரபத்மனால் தேவர்கள் துன்புற நேர்ந்தது என்று சொல்லி கந்தன் கதைக்கு ஆதாரமான கதையாக வீரபத்திரர் வரலாறு இங்கு எழுச்சி உணர்வுடன் எடுத்துரைக்கப்பெற்றிருக்கிறது.
“அடைந்தவி உண்டிடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமகம் ஒடியத் தக்கனை
தடிந்திடும் சேவகன் சரணம் போற்றுவாம்”

என்று கந்தபுராணம் கடவுள் வாழ்த்திலே வீரபத்திரக் கடவுளைப் போற்றுவதுடன் அமையாது, சிறப்பாக தட்ச காண்டத்தில் வீரபத்திரர் வரலாறு குறித்து விரிவாகப் பேசுகிறது. அவற்றுள்ளும் உமை வரு படலம், வேள்விப்படலம், வீரபத்திரப்படலம், யாகசங்காரப்படலம் ஆகியன சிறப்பாக வீரபத்திரர் தக்கன் வேள்வி அழித்த வரலாறு பேசப்பட்டிருக்கிறது.
“அந்திவான் பெரு மேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவனுதல் விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்திரன் எனும் திறலுடை முதல்வன்”
பார்த்த திக்கினில் கொடுமுடி ஆயிரம் பரப்பிச்
சூர்த்த திண்புய வரையிரண்டாயிரம் துலக்கி
போர்த்த தாள்களில் அண்டமும் அகண்டமும் பெயர
வேர்த்தெழுந்தனன் வீரரில் வீரன்”

இப்பாடல்களில் கச்சியப்ப சிவாச்சார்யாரின் கவி ஆளுமையும் பக்தியும் வீரபத்திரப் பெருமான் பேரெழுச்சியும் சிறப்பாகப் புலப்படுகிறது. வீரபத்திரருக்கும் வாகனம் நந்தியே.. சிவ வடிவமான வீரபத்திரர் அந்தணரும் அரசரும் மட்டும் பணியும் கடவுள் அல்லர். அவர் பழங்குடி மக்களின் சிறுகுடில் தோறும் கல் வடிவிலும் , திரிசூல வடிவிலும் நின்று இந்த மக்களுள் மக்களாகிக் காக்கிற கருணைக் கடவுள்.

கருணையின் கடவுள்

வீரபத்திரப் பெருமானின் அவதார நோக்கங்கள் தர்மம் தவறியவரை, இறைவனை மதியாது தாமே என்று இறுமாப்புக் கொண்டவர்களை அழிப்பதாக அமைகின்றன. ஆனால், இவற்றின் முக்கிய நோக்கம் அவர்கள் பேரில் கொண்ட பெருங்கருணையேயாம்.
வைணவர்களுக்கு நரசிம்மாவதாரம் எத்துணை சிறப்புப் பெற்றதோ, அத்துணை சிறப்புடையவராக சைவர்கள் வீரபத்திரரைக் கண்டு வழிபடுகிறார்கள். இங்கெல்லாம், இறைவனின் இயல்பான பெருங்கருணை வெளிப்படுகிறது.
தவறு செய்தாரைத் தண்டித்துத் திருத்துவது என்பது அவர் இனி வரும் நாளில் தவறு செய்யாமலிருக்க உதவும். அவருக்குக் கிடைத்த தண்டனையைக் கண்டவர்கள் தாமும் வாழ்வில் தவறு இழைக்காமலிருக்க உதவும். சில வேளைகளில் இறைவனின் இந்த அவதாரங்களின் போது அசுரர்கள் இறந்து போயினும், அவர்கள் இன்னும் இன்னும் இங்கிருந்து தவறே புரிந்த வாழாமல் அவர்கள் பேரில் தமது திருக்கைகளை வைத்துப் பரமபதம் அனுப்பியதாய் அமையும்.
இதுவன்றி, ஒருவன் செய்கிற தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டு விடுவது தான் அவன் மேன்மேலும் தவறுகள் செய்வதற்கு ஊக்குவிப்பாக அமைந்து அவனை கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும், ஆக, வீரபத்திரப் பெருமானின் செயல்கள் கருணையின் உயர் நிலையிலிருப்பதையே காணலாம்.
செவ்வாய்க்கிழமைகளில், பரணி நாள்களில், அஷ்டமித் திதிகளில் வீரபத்திரரைச் சிறப்பாக வழிபாடு செய்கிற வழக்கம் இருக்கிறது. தும்பைப்பூமாலை சாற்றியும் வெண்ணெய் அணிவித்தும் வணக்கம் செலுத்துவர். கிராமங்களில் பறை முழங்க, பாமரமக்கள் தெய்வீக உணர்வில் திழைத்துக் கூத்தாட நிசி தாண்டும் வரை நடக்கிற வீரபத்திர வழிபாடு எழுச்சி மிக்கதாயிருக்கிறது.
வீரபத்திரர் வெளித்தோற்றத்தில் உக்கிரமாக இருந்தாலும், அவர் மிகவும் குளிர்ச்சியான உள்ளம் படைத்தவராக இருக்கிறார் என்பதை அவரது உடலில் உள்ள ஜீவராசிகளும் காட்டி நிற்கின்றன. குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது. பதின்நான்கு பாம்புகள் அங்கங்கள் தோறும் ஆபரணமாகின்றன. இவை இயற்கையுடன் இணைந்த தெய்வீகத் தோற்றமாகவும், குளிர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன.
அநேகமான வீரபத்திரர் ஆலயங்களில் பெருமானின் அருகில் தட்சன் கூப்பிய கரங்களுடன் வழிபாடாற்றும் நிலையிலான திருவுருவத்தையும் அமைத்திருப்பார்கள். தவறே செய்த தட்சனுக்கும் தயை செய்து காத்த பேரருட் திறனை இது வெளிப்படுத்துகிறது.
வீரம் என்பது பல்திறப்படும். தன்னைத் தான் வெல்வதே பெரு வீரம் என்றும் கொள்வர். இத்தகு ஆன்மபலமாகிய வீரத்திற்கும் வீரபத்திர வணக்கம் துணை செய்யும் எனலாம்.
வீரபத்திரரின் யாக சங்காரம் என்பது பல செய்திகளைப் பக்திமான்களாய சைவசமயிகளுக்கு எடுத்துரைக்கிறது. சிவவழிபாட்டாளர்கள் அந்த தேவதையை, இந்தத் தேவனை, அந்தக் கிரஹத்தை, இந்தக் கிரஹத்தை என்று ஓடி ஓடி வழிபடத்தேவையில்லை.. அவற்றை எல்லாம் தண்டித்து ஆட்கொண்டவராய வீரபத்திரன் விரைகழலை வழிபட்டால் போதுமல்லவா..?
இப்பொருள் பெற திருநாவுக்கரசர் பாடுகிறார்.

“எச்சன் நினைத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல்  இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும்  வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார்  வேள்வி காத்த
உச்ச ந(ய)மன் தாள் அறுத்தார்  சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன்  வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே”

Monday, February 18, 2013

  • தேவாங்கர்களின் திருமண முறைகள்



    திருமண உறவுமுறைகள்

    தேவாங்கர் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களின் குழந்தைகள் தந்தை சார்ந்துள்ள வங்குசம் (வம்சம்) அவர்களுடைய வங்குசமாகக் கொளளப்படுகிறது. தங்கள் வங்குசம் தவிர பிற வங்குசத்தைச் சேர்ந்தவர்களை திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருமண நிச்சயதார்த்த சடங்குகள்

    *      மணமகள் இல்லத்தில் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.    *      மணமகன் வீட்டார் சீர்வரிசைத் தட்டுகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்து மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.    *      தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரரிடம் மணமகன் வீட்டார் அந்த ஊர் தேவாங்கர் சாதி அமைப்பில் நிர்ணயித்துள்ள பணம் செலுத்தி மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.    *      மணபெண்ணுக்கு மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சீர்வரிசைகள் செய்து நலுங்கு வைக்க வேண்டும்.    *      இதன் பின்பு மணப்பெண் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்களிடம் வணங்கி வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.    *      இதன் பிறகு மணமகன் வீட்டார் மணப்பெண் உறவினர்களைத் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரது முன்னிலையிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

    திருமணச் சடங்குகள்

    முகூர்த்த நாளின் முதல் நாள் இரவு மணமக்கள் தாய்மாமன்களால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வரவேண்டும். இப்போது இது வழக்கத்தில் அருகி வருகிறது.

    வீரமாஸ்தி கும்பிடுதல்

    தேவையான பொருட்கள்

    மணமக்கள் அணிந்து கொள்ள தலா 2 ஜதை வேஷ்டிகள் வீதம் – 4 ஜதைகள் ஈரிழை சிவப்பு துண்டுகள் – 4கூரை புடவை ( கோலமல சேலை ) – 1 செட் தாலி, கால் மிஞ்சு அங்குநூல், காதோலை கருமணி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி முதலியன..- பூஜை முடிந்தபின் மணமகனுக்கு தாய்மாமன் மிஞ்சு அணிவிக்க வேண்டும்.

    இரவு விருந்து (கை நீர் சொம்பு வழங்குவது)

    மணமகன் வீட்டினர் தன்னுடைய தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் கை நீர் சொம்பு வழங்க வேண்டும். செட்டிமைக்காரர் ஸ்தல பெத்தருக்கும், மணப்பெண் வீட்டார் சொந்தக்காரருக்கும் தங்களிடம் உள்ள கைநீர் சொம்பைக் கொடுத்து விருந்துக்கு அழைக்க வேண்டும். மணமகன் வீட்டினர் தன்னுடைய சொந்தக்காரருக்குக் கை நீர் சொம்பு கொடுத்து உறவினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.

    பூஜை

    தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் அமர கம்பளி விரித்து வைக்க வேண்டும். அவரிடம் மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்குரிய பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

    கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

    அரணை முட்டிகள் - 6முச்சளம் - 6மொந்தை - 4ஊசி மூடிகள் - 2மண் தீபங்கள் - 7மண் தூபக்கால்- 2    *      பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும்.    *      அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.    *      கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும்.    *      கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும்.    *      முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.    *      கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

    கங்கணம் கட்ட தேவையான பொருட்கள்

    மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.

    கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்

    வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

    செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்

    *      மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.    *      மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.    *      செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும்.    *      மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும்.    *      மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது.    *      அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

    ஸ்தலது கொம்பு விவரம்

    அரச மரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே ஸ்தலது கொம்பு திருமூர்த்திகளுக்கு வணக்கம் செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகும்.மணமகன் மணவறையில் அமர்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    பூஜைக்கு தேவையான பொருட்கள்

    அரசமரக் கொம்பு, மஞ்சள் கொம்பு, மண் தீபம், அச்சு வெல்லம், பச்சரிசி 1 படி, தேங்காய் -3, பழம் -2, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழை இலை, குங்குமம்

    பூஜை முறை

    *      கோவிலில் அரச இலையில் பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.    *      மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது மணமகனின் சகோதரி மேற்கண்ட பூஜைப் பொருட்களுடன் புது கூடையில் மணமகன் அணிந்து கொள்ளும் மஞ்சள் வேஷ்டி, பணம் மற்றும் புது பாய் எடுத்துச் செல்ல வேண்டும்.    *      பூஜைக்கு கொண்டு செல்லும் 3 தேங்காய்களில் 1 பிள்ளையாருக்கும், 2 வது தேங்காய் பஜனை கோவிலுக்கும், 3 வது தேங்காய் மணமகளின் மடியில் பச்சரிசியுடன் வைத்து கட்டிக் கொள்ளவும் வேண்டும்.    *      மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு போகும்போது தாய்மாமன் கொடுத்த அங்கவஸ்திரத்தை வலது தோள் மீதும், மஞ்சள் வேஷ்டியை இடது தோள் மீதும் அணிந்து செல்ல வேண்டும். பூஜை முடித்து வரும்போது மணமகளின் சகோதரி மணமகனுக்கு பாத பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமகனுக்கு பால், பழம் கொடுக்க வேண்டும். தாலி கட்டிய பின் கம்பளி விரித்தல்    *      செட்டிமைக்காரர் உறவினர் முன்னிலையில் மணமக்களின் தாய்மாமன்கள் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து அதையும் ஜம்புதாடி கத்தியையும் செட்டிமைக்காரர் வசம் ஒப்படைத்தல், செட்டிமைக்காரர் மணமகன் வீட்டாரிடம் பணம் பெற்று கங்கண துணியில் வைத்து மஞ்சள் முடிப்பை மணமகள் வீட்டாரிடம் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். காலி மஞ்சள் முடிப்பை மணமகன் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். பின் இரு வீட்டாரிடமிருந்தும் கங்கண முடிப்பை செட்டிமைக்காரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.    *      செட்டிமைக்காரர் வரிசைப்படி வங்குசதாரர்களை அழைத்து செலவு சம்பாரம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.            


Sunday, February 17, 2013

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திரம்

                      ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திரம்

ஓம் ஸாம்பவ்யை நமஹ
ஓம் ஸம்புப் பிரியாயை நமஹ
ஓம் ஸாகம்பர்யை நமஹ
ஓம் பனஸங்கர்யை நமஹ
ஓம் தாண்டவேஸ்வர்யை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் சிம்மவாகின்யை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் மகேஸ்வர்யை நமஹ
ஓம் மனோன்மன்யை நமஹ
ஓம் சௌடேஸ்வர்யை நமஹ
ஓம் தேவாங்க பூஜிதாயை நமஹ
ஓம் தேவாங்ககுல பாலின்யை நமஹ
ஓம் உன்மீலன்யை நமஹ
ஓம் ஹ்ரீங்கார்யை நமஹ
ஓம் ஓங்கார ரூபிண்யை நமஹ
ஓம் அன்னபூர்ணேஸ்வர்யை நமஹ
ஓம் வாண்யை நமஹ
ஓம் பார்வத்யை நமஹ
ஓம் காயத்ரியை நமஹ
ஓம் சாவித்ரியை நமஹ
ஓம் சரஸ்வத்யை நமஹ
ஓம் சாமுண்டாயை நமஹ
ஓம் ம்ருண்டாயை நமஹ
ஓம் சுமத்யை நமஹ
ஓம் ஹேமவத்யை நமஹ
ஓம் மஹாமாயை நமஹ
ஓம் ஸர்வாண்யை நமஹ
ஓம் கிரிஜாயை நமஹ
ஓம் கீர்வாண்யை நமஹ
ஓம் மதுமத்யை நமஹ
ஓம் கார்த்யாயன்யை நமஹ
ஓம் தயாரச பூரிதாயை நமஹ
ஓம் அம்பிகாயை நமஹ
ஓம் கம்புகண்ட்யை நமஹ
ஓம் கல்யாண்யை நமஹ
ஓம் ருத்ராண்யை நமஹ
ஓம் பவான்யை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் கௌர்யை நமஹ
ஓம் லக்ஷ்மியை நமஹ
ஓம் தரண்யை நமஹ
ஓம் தாரிண்யைநமஹ
ஓம் விஸ்வாத்மிகாயை நமஹ
ஓம் ஸர்வ மங்களாயை நமஹ
ஓம் மாதங்க்யை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் நிர்மலாயை நமஹ
ஓம் காந்த்யை நமஹ
ஓம் சச்சிதானந்த ரூபிண்யை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் சண்ட்யை நமஹ
ஓம் காள்யை நமஹ
ஓம் கௌமார்யை நமஹ
ஓம் பலாயை நமஹ
ஓம் பிண்டாண்டமய்யை நமஹ
ஓம் கலலிதாயை நமஹ
ஓம் ஸூபாயை நமஹ
ஓம் பரப்பிரம்ம சொரூபிண்யை நமஹ
ஓம் சுமுக்யை நமஹ
ஓம் குஜசம்ஹாரிண்யை நமஹ
ஓம் ராமலிங்க அர்த்தாங்க்யை நமஹ
ஓம் ராமநாதப்ரியாயை நமஹ
ஓம் கனகதுர்க்காயைநமஹ
ஓம் அஹங்காள்யை நமஹ
ஓம் கலிகல்மிஷ நாஸின்யை நமஹ
ஓம் கண்டேந்து திலகாயை நமஹ
ஓம் கதாதாரிண்யை நமஹ
ஓம் திரிசூலின்யை நமஹ
ஓம் காயத்ரிபீடாதீஸ்வர்யை நமஹ
ஓம் ருக்ரூபாயை நமஹ
ஓம் ருக் ஸியாகாதீஸ்வர்யை நமஹ
ஓம் ருணத்ரய விமோசின்யை நமஹ
ஓம் பக்திப்ரியாயைநமஹ
ஓம் பக்த ஜன உத்தாரிண்யை நமஹ
ஓம் ஆஸ்ரித வத்ஸலாயை நமஹ
ஓம் சரணாகத ரக்ஷிண்யை நமஹ
ஓம் ஜஹிகாமுஸ்மிகா பலப்ரதாயை நமஹ
ஓம் பூர்ணாயை நமஹ
ஓம் க்ஷமாயை நமஹ
ஓம் நிரகாராயை நமஹ
ஓம் உமாயாயை நமஹ
ஓம் கோதண்டபாண்யை நமஹ
ஓம் தனதான்ய ஐஸ் வர்யாயை நமஹ
ஓம் ரோஹிண்யை நமஹ
ஓம் சித்த சாரண ஸேவிதாயாயை நமஹ
ஓம் யக்ஞப்ரியாயை நமஹ
ஓம் வசுதேவதாயை நமஹ
ஓம் ஜயாயை நமஹ
ஓம் விஜயாயை நமஹ
ஓம் ஹிரண்மய்யை நமஹ
ஓம் சௌம்யாயை நமஹ
ஓம் யோகாயை நமஹ
ஓம் அப்ரதிமாயை நமஹ
ஓம் பிரம்மாண்ட பாண்டோதராயைநமஹ
ஓம் விஸ்வம்பராயை நமஹ
ஓம் விஸ்வமோஹின்யை நமஹ
ஓம் வசுந்தராயை நமஹ
ஓம் வித்யாதர பூஜிதாயை நமஹ
ஓம் தேவசாலி வரப்ரதாயை நமஹ
ஓம் வரரூஷி ஸேவிதாயை நமஹ
ஓம் சர்வக்ஞ பாலின்யை நமஹ
ஓம் புஷ்பதந்தார்ஜிதாயை நமஹ
ஓம் தாசமய்ய தவஸித்ய அனுக்கிரகதாயின்யை நமஹ
ஓம் பேதாள சாப விமோசின்யை நமஹ
ஓம் தேவல வம்ஸ பூஜிதாயை நமஹ
ஓம் தேவல வம்ஸ பூஜிதாயை நமஹ
ஓம் ஹைம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வர்யை நமஹ

Thanks,
 
Boobalan Vr in Kannada Devangar Community

KANNADA DEVANGAR FACEBOOK GROUPS

http://www.facebook.com/groups/kannadadevangachettiar/
http://www.facebook.com/groups/189138814468658/
http://www.facebook.com/groups/KannadaDevangar/
http://www.facebook.com/groups/davangar/